Editorial / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிகளுக்கிடையிலான போட்டி முடிந்த பின்னர் இரண்டு அணிகளின் வீரர்களும் கைகலப்பொன்றில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெற்றிபெற்ற மன்செஸ்டர் சிற்றியின் வீரர்கள் கொண்டாடிய விதம் மரியாதைக் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு யுனைட்டெட்டின் அறைக்கு கேட்குமளவுக்கு சத்தமாக இருந்ததாக கூறப்படுகிறது இதனையடுத்தே இரண்டு அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கிடையே சிற்றியின் அறைக்கு வெளியே கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுனைட்டெட்டின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ மீது பாலும் நீரும் எறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவதுடன், சிற்றியின் கோல் காப்பாளர் எடேர்சனுடன் கைகலப்பில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் மிக்கேல் அர்டிட்டுக்கு தலையில் காயமேற்பட்டதாகவும் முகத்திலிருந்து இரத்தம் வழிந்தோடியதாகவும் கூறப்படுகிறது.
10 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago