2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

‘போர்மியுலா வண் மீள்வருகைக்கு அலோன்ஸோ தயார்’

Editorial   / 2020 மே 19 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போர்மியுலா வண்ணுக்கு அடுத்தாண்டு திரும்ப முன்னாள் சம்பியனான பெர்ணான்டோ அலோன்ஸோ தயாராகவுள்ளதாக அவரது பிரதான ஆலோசகர் பிளவியோ பிறியடோரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீள்வருகை குறித்து றெனோல்ட் அணியுடன் ஸ்பானிய ஓட்டுநரான பெர்ணான்டோ அலோன்ஸோ பேச்சுக்களைக் கொண்டிருந்ததாகவும், ஆனால் இறுதி முடிவொன்றை றெனோல்ட் எடுக்கவில்லை என அறியப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு முடிவில் போர்மியுலா வண்ணை விட்டுச் சென்ற பெர்ணான்டோ அலோன்ஸோ, இன்டியானாபொலிஸ் 500-இல் பந்தயத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார்.

இப்பருவகால முடிவில் பெராரி அணியை விட்டு ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், மக்லரென் அணியின் ஸ்பானிய ஓட்டுநரான கார்லோஸ் சைன்ஸால் பிரதியிடப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கார்லோஸ் சைன்ஸின் பிரதியீடாக மக்லரென் அணியில் அவுஸ்திரேலிய ஓட்டுநரான றெனோல்ட் அண்யின் டேனியல் றிச்சியார்டோ கைச்சாத்திடப்பட்ட நிலையில், றெனோல்ட் அணியில் அடுத்தாண்டு வெற்றிடமொன்று நிலவுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--