2020 ஜூன் 04, வியாழக்கிழமை

றோமாவை விட்டு விலகுகிறார் டி றோசி

Editorial   / 2019 மே 15 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு பருவகாலத்துடன், இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவிலிருந்து அக்கழகத்தின் அணித்தலைவரும், மத்தியகளவீரருமான டேனியல் டி றோசி விலகுகின்றார்.

றோமாவில் 2000ஆம் ஆண்டு இணைந்திருந்த டேனியல் டி றோசி, றோமாவுக்காக 615 போட்டிகளில் விளையாடி அவ்வணிக்காக 63 கோல்களைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், டேனியல் டி றோசி ஓய்வு பெறவில்லை எனத் தெரிவித்த றோமாவின் அறிக்கையொன்று, வேறு எங்கோ செல்கின்றார் எனக் கூறியிருந்தது.

றோமாவுடன் கோப்பா இத்தாலியாவை இரண்டு தடவையும், சுப்பர் கோப்பாவை ஒரு தடவையும் வென்றிருந்த டேனியல் டி றோசி, றோமாவில் பணிப்பாளரொருவாக மாறும் வாய்ப்பை நிராகரித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X