Editorial / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியம் கிரான்ட் பிறிக்ஸ் வாகன ஓட்டப் போட்டியை, மேர்சிடீஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன் வெற்றிகொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இப்போட்டியில், ஃபெராரியின் செபஸ்டியன் வெட்டலை முந்திக் கொண்டே, ஹமில்டன் வெற்றிபெற்றார். 3ஆவது இடத்தை, றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிக்கார்டோ வென்றார்.
ஹமில்டனின் இந்த வெற்றி, அவரது வாகன ஓட்டுநர் வரலாற்றில், அவர் வெற்றிகொண்ட 58ஆவது கிரான்ட் பிறிக்ஸ் பட்டமாகும்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்துக்கான வரிசையில், முதலிடத்தில் காணப்படும் வெட்டலுக்கும் தனக்குமிடையிலான புள்ளிகளின் வித்தியாசத்தை, 7 புள்ளிகளாக, ஹமில்டன் குறைத்துக் கொண்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago