2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஸ்டைறியன் குரான் பிறீயை வென்றார் ஹமில்டன்

Editorial   / 2020 ஜூலை 12 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று நடைபெற்ற ஸ்டைறியன் குரான் பிறீயை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் இலகுவாக வென்றார்.

இப்பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனை மூன்றாமிடத்துக்கு பின்தள்ளி இரண்டாமிடத்தைப் பெற்றார்.

அந்தவகையில் இப்பந்தய முடிவில் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 43 புள்ளிகளுடன் வல்ட்டேரி போத்தாஸ் முதலிடத்தில் உள்ள நிலையில், ஆறு புள்ளிகள் குறைவாக 37 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியனான ஹமில்டன் காணப்படுகிறார். மக்கலெரென் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லன்டோ நொரிஸ் 26 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--