Super User / 2011 ஜனவரி 23 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 3 ஆவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. சிட்னியில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவ்வணி 4 விக்கெட்டுகளால் வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 214 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. விக்கெட் இழப்பிற்கு ஜொனதன் ட்ரொட் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களைப் பெற்றார். அவ்வணியின் சார்பில் வேறு எவரும் அரைச்சதத்தை நெருங்கவில்லை.
அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் பிரெட் லீ 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவுஸ்திரேலிய அணி 46 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணியின் முதல் 5 துடுப்பாட்ட வீரர்களில் பிரெட் ஹாடின் தவிர்ந்த ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும் டேவிட் ஹஸி 68 ஓட்டங்களையும் பிரெட் ஹாடின் 54 ஓட்டங்களையும் பெற்று அணியை பலப்படுத்தினர்.
பிரெட் லீ இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார். 7 போட்டிகள் கொண்ட இத்தொடரின் 4 ஆவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை அடிலெய்ட் நகரில் நடைபெறவுள்ளது.
9 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
38 minute ago
1 hours ago