2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்று

Kogilavani   / 2013 ஜூலை 21 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

சென் லூசியாவில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இன்று மாலை 6.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொண்ட போதிலும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி மொசமான பெறுபேற்றை வெளிப்படுத்தி, தோல்வியடைந்திருந்தது.

மூன்றாவது போட்டியில் இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 14 ஓட்டங்களைப் பெற்று, போட்டியைச் சமநிலையில் முடித்துக் கொண்டது.

இதன் காரணமாக தொடரின் நிலை 1-1 என்ற கணக்கிலேயே காணப்படுகிறது.

இரு அணிகளினதும் முன்வரிசை வீரர்கள் ஓட்டங்களைப் பெறத் தடுமாறி வருகின்ற நிலையில், இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறப்படாத போட்டிகளே காணப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் அணி சார்பாக மிஸ்பா உல் ஹக் மாத்திரமே அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெற்று வந்த நிலையில், உமர் அக்மல் தற்போது ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:
பாகிஸ்தான்: நசீர் ஜம்ஷெத், அஹமட் ஷெஷாத், மொஹமட் ஹபீஸ், மிஸ்பா உல் ஹக், ஹரிஸ் சொஹைல், உமர் அக்மல், ஷகிட் அப்ரிடி, வகாப் றியாஸ், ஜூனைட் கான், சயீட் அஜ்மல், மொஹமட் இர்பான்

மேற்கிந்தியத் தீவுகள்:
கிறிஸ் கெயில், ஜோன்சன் சார்ள்ஸ், டெரன் பிராவோ, லென்டில் சிமன்ஸ், மார்லன் சாமுவேல்ஸ், டுவைன் பிராவோ, கெரான் பொலார்ட், டெரன் சமி, ஜேஸன் ஹோல்டர், சுனில் நரைன், கேமர் றோச்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--