2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

தெல்லிப்பளை பிரதேச செயலகம் மூன்றாவது தடவையாகவும் மாவட்ட சம்பியனாக தெரிவு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவினால் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே இடம்பெற்ற தடகளப் போட்டிகள், பெரு விளையாட்டுப் போட்டிகளில் 92 புள்ளிகளைப் பெற்ற தெல்லிப்பளை பிரதேச செயலகம் மூன்றாவது தடவையாகவும் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது
   
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ரூபிணி வரதலிங்கம் தலைமையில் தடகளப்  போட்டிகள் கடந்த இரு நாள்களாக நடைபெற்றன.
 
மேற்படி விளையாட்டுப் போட்டிகளில்  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பிரதம விருந்தினராகவும், யாழ். மாநகரசபை மேயர் திருமதி பற்குணராசா யோகேஸ்வரி கௌரவ விருந்தினராகவும்  வடமாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் சி.அண்ணாத்துரை, வட வலய மக்கள் வங்கி உதவிப் பொதுமுகாமையாளர் ரி.கே .ஆனந்தராசா, இலங்கை சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தின் யாழ்ப்பாண திட்ட முகாமையாளர் க.மகேந்திரன் சிறப்பு விருந்தினர்களாகவும்  கலந்து கொண்டனர்.

நாட்டின் சாந்தி சமாதானத்திற்காக வேண்டி யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் யாழ் மாநகரசபை முதல்வரும் வெள்ளைப் புறாவை பறக்க விட்டனர்.

அனைத்துப் போட்டிகளின் நிறைவில் தெல்லிப்பளை பிரதேச செயலகம்  92 புள்ளிகளைப் பெற்று முதலாம்  இடத்தையும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் 72 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் நல்லூர் பருத்தித்துறைப் பிரதேச செயலகங்கள் 47 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும்  பெற்றுக்கொண்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--