Super User / 2010 நவம்பர் 05 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி டக்வேர்த்- லூயிஸ் முறையில் 29 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதன் மூலம் இலங்கை கிரிகெட் அணி அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து முதற் தடவையாக தொடரை கைப்பற்றியுள்ளது.
மழையினால் அடிக்கடி பாதிக்கப்பட்ட இப்போட்டியில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் டக்வேர்த்- லூயிஸ் விதியின்படி அவுஸ்திரேலிய அணி 38 ஓவர்களில் 240 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் 37.4 ஓவர்களில் 210 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளைளும் இழந்தது. இதனால் இலங்கை அணி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைப் பெற்ற உபுல்தரங்க இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.
3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இத்தொடரின் வெற்றியையும் இலங்கைஅணி கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலிய மண்ணில் 26 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அணி போட்டிகளில் பங்குற்ற ஆரம்பித்த போதிலும் அங்கு சுற்றுப்போட்டியொன்றில் இலங்கை சம்பியனாகியமை இதுவே முதல் தடவையாகும்.
இத்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
14 minute ago
17 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
35 minute ago
42 minute ago