2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பெட்ரோவுக்கான ஒப்பந்தத்துக்கு இணங்கியது செல்சி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்சிலோனா அணியின் முன்கள வீரரான பெட்ரோவை 21 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்சுக்கு ஒப்பந்தம் செய்துகொள்ள செல்சி விளையாட்டுக்கழகம் இணங்கியுள்ளது.

மன்செஸ்டர் யுனைட்டெட் விளையாட்டுக்கழகத்தின் இலக்காக இருந்த 28 வயதான பெட்ரோ ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக லண்டனுக்கு பயணமாகவுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் தேசிய வீரரான இவர் 2008ஆம் ஆண்டு பார்சிலோனா அணியில் அறிமுகத்தை மேற்கொண்டு 326 போட்டிகளில் 99 கோல்களை பெற்றுள்ளார்.

பெட்ரோவின் வருகையை தொடர்ந்து செல்சி விளையாட்டுக்கழகத்தில் ஏழு மாதங்கள் மட்டுமே இருந்த கொலம்பிய அணியின் தேசிய வீரரான ஜுவான் குவாட்ரடோ வெளியேறவுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .