Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்ணம்
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்ட, கரப்பந்தாட்ட நடுவர்களின் தரப்படுத்தலுக்கான தகுதி காண் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, தர உயர்வு பெற்ற 66 நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம், கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, தேசிய விளையாட்டு நிறுவனத்தில், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது.
இதன் அடிப்படையில், "சீ" தரத்தில் இருந்து "பீ" தரத்துக்கு சித்தியடைந்த நடுவர்கள் 32 பேருக்கும் "பீ" தரத்தில் இருந்து "ஏ" தரத்துக்கு சித்தியடைந்த நடுவர்கள் 34 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இவ்வைபவத்தில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனில் எதிரிசூரிய மற்றும் கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எஸ். நாலக்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
53 minute ago
02 Jul 2025