2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

தேசங்களுக்கான லீக்: நெதர்லாந்தை வென்றது இத்தாலி

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், நெதர்லாந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற நெதர்லாந்து, இத்தாலிக்கிடையேயான குழு ஏ போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலா பரெல்லா பெற்றிருந்தார்.

இந்நிலையில், பொஸ்னியா அன்ட் ஹெர்ஸேகோவினாவில் நடைபெற்ற போலந்து, பொஸ்னியா அன்ட் ஹெர்ஸேகோவினாக்கிடையேயான இன்னொரு குழு ஏ போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் போலந்து வென்றது. போலந்து சார்பாக, கமில் கிலிச், கமில் குறொசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பொஸ்னியா அன்ட் ஹெர்ஸேகோவினா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரிஸ் ஹரஜ்ராடினோவிச் பெற்றிருந்தார்.

இதேவேளை, வட அயர்லாந்தில் நடைபெற்ற வட அயர்லாந்துக்கும், நோர்வேக்குமிடையிலான போட்டியில் 1-5 என்ற கோல் கணக்கில் வடஅயர்லாந்து தோல்வியைத் தளுவியது. நோர்வே சார்பாக, எர்லிங் பிறோட் ஹலான்ட், அலெக்ஸான்டர் சொர்லொத் ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், மொஹமட் எலியூனோஸ்ஸி ஒரு கோலையும் பெற்றனர். வட அயர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை படி மக்நைர் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--