2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

அசுத்தமாக இயங்கிய உணவு விடுதியை மூட உத்தரவு

Suganthini Ratnam   / 2017 மே 31 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு நகரில் அசுத்தமாகக்; காணப்பட்ட உணவு விடுதியொன்றை எதிர்வரும் 15ஆம் திகதிவரை மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

மேலும், இந்த உணவு விடுதியின் உரிமையாளரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் நீதவான் விடுவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரில்  செவ்வாய்க்கிழமை (30) பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்  சோதனை மேற்கொண்டபோது, இந்த உணவு விடுதியிலிருந்து பாவனைக்குதவாத உணவுப் பொருட்களையும் மலசலகூடக் குழிக்கு அருகிலிருந்து இறைச்சியையும் மீட்டுள்ளனர்.

சுகாதாரமற்ற முறையிலும்; அனுமதிப்பத்திரமின்றியும் உணவு விடுதியை நடத்தியமை தொடர்பில் மேற்படி உரிமையாளர்  மீது; சுகாதாரப் பரிசோதகர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த உணவு விடுதியில் சுத்தம் பேணப்பட்டு, அது தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே, இந்த உணவு விடுதியை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X