2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

அதிகரித்த மின்சாரத்தால் மின் பொருள்கள் சேதம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2020 மார்ச் 11 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாழைச்சேனை  பிரதேசத்தில் மின்சாரம் அதிகரித்து வந்தமை காரணமாக ,  வீட்டு மின் பாவனைப் பொருள்கள் சேதடைந்துள்ளனவென, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை பகுதியில் நேற்று (11) மாலை மின்சாரம் அதிகரித்து வந்தமையால் வீடுகளிலிருந்த தொலைக்காட்சி, வானொலி, கணினி, சமையலறை இலத்திரணியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல மின்பொருள்கள் சேதமடைந்துள்ளன.

மின்சாரம் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் வாழைச்சேனை மின்சார சபைக்கு, பொதுமக்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தும் மின்சாரசபை ஊழியர்கள் இதில் கூடிய கவனம் செலுத்தவில்லை எனப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான மின்சார அதிகரிப்பு வராத வண்ணம் வாழைச்சேனை மின்சார சபையினர் உரிய நடவடிக்கை  எடுக்குமாறு, பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .