2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'அதிகாரப்பரவலாக்கலை தீர்வாக வேண்டுகின்றோம்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

'பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற்றுக்கொள்ள முடியாத அதிகாரப்பரவலாக்கலை தீர்வாக வேண்டுகின்றோம். அதற்காக எத்தனை விட்டுக்கொடுப்புகளையும் செய்வதற்குத் தமிழ்த் தேசிய் கூட்டமைப்பு தயாராக உள்ளது என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 09ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு, பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'30 வருடகால யுத்தத்தின்போது நாம் இழந்தவை ஏராளம். கல்வி, பொருளாதாரம், சொத்து, உயிர் ஆகியவற்றை நாம் இழந்தோம். தற்போதைய நல்லாட்சியில் நாம் இழந்தவைகளை பெற வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் எமது மக்களுக்கு அனைத்தையும் பெற்றுக்கொடுக்குமா என்பதிலேயே நாம்  அக்கறையாக உள்ளோம். இதற்காக த.தே.கூ பல விட்டுக்கொடுப்புகளைச்; செய்து படிப்படியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது' என்றார்.  

'தமிழர்களாகிய நாம்; சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எமது அபிலாஷையாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும். சமஷ்டி  ஏற்பட வேண்டும். அத்துடன், அதிகாரப்பரவலாக்கலும் எமக்குத் தேவையாக உள்ளது. இவற்றை நல்லாட்சி அரசாங்கம் எமக்குத் தரவேண்டும் என்பதற்காகவே த.தே.கூ போராடுகின்றது.
ஒற்றையாட்சி என்றால் தமிழர்கள் எதிர்க்கின்றார்கள். சமஷ்டி என்றால் பெரும்பான்மை இனத்தவர்கள்; அஞ்சுகின்றனர். இவை இரண்டையும் தவிர்த்து புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதன் மூலம் தமது ஆட்சியைக் காப்பாற்ற முடியும் என்று அரசாங்கம் நினைக்கின்றது.

ஒற்றையாட்சியே  கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன், வேறு எதையும் தாம்; ஏற்கமாட்டோம் என்று பெரும்பான்மையினக் கட்சிகள் கூறுகின்றன. சமஷ்டியை ஏற்க முடியாது என்றும் கூறுகின்றன.
எமது தலைமையானது பிரிக்கப்படாத நாட்டில் அதி உச்ச அதிகாரப்பரவலாக்கம் வேண்டும் எனவும் ஒற்றையாட்சியை ஏற்க முடியாது எனவும் கூறுகின்றது.

எமக்கான தீர்வை இந்த அரசாங்கத்தின் மூலம் நாம் எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பல விடயங்களைச் சகித்து வருகின்றோம். கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பானது தமிழர்கள் இந்நாட்டில் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் நிலைமையை உருவாக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .