2021 மே 06, வியாழக்கிழமை

அனுமதி அட்டையில் வேறொரு பாடம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அதிபர் சேவை தரம் -111 பரீட்சைக்கான தமிழ்மொழி மூலப் பரீட்சார்த்திகளுக்கு வர்த்தமானியில் குறிப்பிட்ட பாடமல்லாமல், வேறொரு பாடத்தின் பெயர், அனுமதி அட்டையில் போடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மொழி மூலப் பரீட்சார்த்திகள் தெரிவித்தனர்.  

அதிபர்; சேவை தரம் -111 பரீட்சைக்கான பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரப்பட்ட வர்;த்தமானி அறிவித்தலில் 03 பாடங்கள் கோரப்பட்டிருந்தன. அதில் கிரகித்தல், கல்வி நிர்வாகம் அல்லது சம்பவக்கற்கை, பொது அறிவு மற்றும் சவால்களும் ஆகிய பாடங்களே கோரப்பட்டிருந்தன. ஆனால், பரீட்சைத் திணைக்களத்தினால் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அனுமதி அட்டையில் 1என்ற பாடம்  அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சார்த்திகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டபோதிலும், சரியான பதில் கிடைக்கவில்லையெனவும் இவர்கள் கூறினர்.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட பொது அறிவு மற்றும் சவால்களும் என்ற பாடத்துக்கு தயராகிவந்த நிலையில், அனுமதி அட்டையில் வேறொரு பாடத்தின் பெயர்  குறிப்பிடப்பட்டுள்ளதால் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும்  பரீட்சார்த்திகள் தெரிவித்தனர்.

இந்தப் பரீட்சைக்காக மட்டக்களப்பு மாவட்;டத்திலிருந்து 4,000 பரீட்சார்த்திகளும் தேசிய ரீதியாக சுமார் 30,000 தமிழ்மொழி மூலப் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .