2021 ஜனவரி 16, சனிக்கிழமை

அரசியல் பழிவாங்கல்களுக்கு இடமில்லை

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

  அரச அதிகாரிகள், அரசியல் ரீதியாக நசுக்கப்படவோ அல்லது பழிவாங்கப்படவோ ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும், மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்றுக் (24)கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்...

மக்களுக்கான சேவை வினைத்திறன் மிக்கதாக அமைய வேண்டுமாக இருந்தால் அரச அதிகாரிகள் சுயாதீனமாக செயற்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

 அரசியல் தலைமைகளின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப அரச அதிகாரிகள் செயல்பட வேண்டுமென்கின்ற நிலையில் அரச அதிகாரிகள் சுயமாக செயல்பட முடியாத அளவுக்கு நசுக்கப்பட்ட சூழல் கடந்த காலத்தில் காணப்பட்டது.

இதனை யாரும் மறுக்கமாட்டார்கள்.இவ்வாறாக அரச அதிகாரிகள் நசுக்கப்படுகின்ற நிலை மாற்றமடைய வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டு நாட்டில் அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர்.

அந்த அடிப்படையில் அரச அதிகாரிகள் மீது அரசியல் தலைவர்களின் எந்தவிதமான தலையிடும், அரசியல் பழிவாங்கலும் இடம்பெறக்கூடாது என்பது கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் எதிர்பார்ப்பாகும்.

கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தபோது அவருடன் இணைந்து செயற்பட்ட அதிகாரிகள் என்பதற்காக பல அதிகாரிகள் அரசியல் ரீதியாக பழி வாங்கப்பட்டார்கள்.

பதவி உயர்வுகளின்போது புறக்கணிக்கப்பட்டார்கள்.தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட சம்பவங்களும் கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .