ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச காரியாலயங்களில் பணிபுரிகின்ற சாரதிகளுக்கான திறன் விருத்திப் பயிற்சிச் செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்றது.
சாரதிகளின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறியில், மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து வாகன பரிசோதகர் டி. சிவயோகன் வளவாளராகக் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார்.
வாகன சாரதிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சட்டதிட்டங்கள் ஆகியன இச்செயலமர்வில் தெளிவுபடுத்தப்பட்டன.
மேலும், அரசாங்கத் திணைக்களங்களின் வாகனங்களைப் பராமரிக்கும் முறைகள், விபத்துகளில் இருந்து எவ்வாறு தவிர்த்துக் கொள்வது பற்றியும் அரசாங்க வாகனம் விபத்துக்குள்ளானால் எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றுவது என்பன குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டன.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago