2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

அலுவலக உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சங்கங்கள், பொது நிறுவனங்கள், கழகங்கள், மதஸ்தலங்களுக்கு உட்பட 12 சமூகநல அமைப்புக்களுக்கு அலுவலக உபகரணங்களை இன்று வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கிவைத்தார்.

கணினிகள், மின்பிறப்பாக்கி, படப்பிரதி இயந்திரம், கதிரைகள் உட்பட அலுவலக உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக இராஜாங்க அமைச்சர் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு –செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் 90 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா தலைமையில் இடம்பெற்ற மேற்படி அலுவலக உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .