2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஆணின் சடலம் வீதியில் மீட்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர், ஜயங்கேணி, கிருஷ்ணகோவில் வீதியில், ஆணொருவரின் சடலம், இன்று (18) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதென, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளவர், கணபதி கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழலாளியான, 48 வயதுடைய காந்தலிங்கம் உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமான மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து, அவரது தாயுடன் வாழ்ந்துவந்துள்ள நிலையிலேயே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர் அருந்தியிருந்த மதுபானத்தில் விசம் கலந்தமையின் காரணமாக, அவர் நிலை தடுமாறி வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளாரென, சந்தேகம் வெளியிட்டுள்ள ஏறாவூர்ப் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X