Thipaan / 2017 மே 19 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, ஆயைம்பதி பிரதேச சபையின் பொது நூலகக் கட்டத்தை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், இன்று (19) திறந்து வைத்தார்.
நெல்சிப் திட்டத்தின் கீழ், 17 மில்லியன் ரூபாய் செலவில், ஆரையம்பதி பிரதேச சபை வளாகத்தில் இந்த பொது நூலகக் கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது நூலக கட்டடத் திறப்பு நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மற்றும் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இரா.துரைரட்ணம், கோவிந்தன் கருணாகரம், சிப்லி பாறூக், மற்றும் எம்.நடராஜன் மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் என்.கிருஷ்ணபிள்ளை உட்பட முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஆரையம்பதி பொது நூலக கட்டடத்தில், நூலக இரவல் பகுதி மற்றும் வாசிப்பு பகுதி என பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 Nov 2025