2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இடமாற்றத்தைக் கண்டித்து கிராம மட்ட அமைப்புகள் வெளிநடப்பு

Suganthini Ratnam   / 2017 ஜூலை 13 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

வாகரை பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து கிராம மட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர், அப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றபோதே, இந்த வெளிநடப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இக்கூட்டத்தில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அரசியல் பிரமுகர்களும் மாத்திரமே கலந்துகொண்டனர்.

வாகரைப் பிரதேச செயலாளர்  ஆர்.ராகுலநாயகி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்கு அப்பிரதேச மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பில் வெளிநடப்புச் செய்தோர் தெரிவிக்கையில், 'எமது பிரதேச அபிவிருத்தியில் பாரிய பங்களிப்புச் செய்துவந்த பிரதேச செயலாளரை திடீரென கொழும்புக்கு இடமாற்றியுள்ளனர். இதற்கான காரணம் எமக்கு இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.
'இவரது இடமாற்றம் தொடர்பில் கலந்துரையாடி தீர்வு வழங்கப்படும் என்றிருந்தபோது, இதற்கு நான்கு தினங்களாகியும் எந்தப் பதிலும் வழங்கப்படாத நிலையில், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடத்துகின்றார்கள்.

'இப்பிரச்சினை தொடர்பில் தீர்வு கிடைக்காத   ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றி வேண்டிய தேவையில்லை எனக் கூறி கூட்டத்தைப் பகிஷ்கரித்துள்ளோம்' என்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .