2021 ஜனவரி 20, புதன்கிழமை

இந்திய புடைவை வியாபாரிகள் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 13 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, மாவடிவேம்புக் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த இந்திய புடைவை வியாபாரிகள் இருவரை செவ்வாய்க்கிழமை (12) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 72 சல்வார்கள், 17 சட்டைகள் உட்பட சுமார் 02 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆடைகளையும் கைப்பற்றியுள்ளனர்.  

இந்தியாவின் தமிழ்நாடு, மதுரை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரையா அங்குறாஸ் (வயது 31), இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்;ந்த சங்கரன் சுப்ரன் (வயது 53) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்கள்; கிராமப்புறங்களில் வீடு, வீடாகச் சென்று சாறி, சல்வார் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதாக தமக்கு பொதுமக்களிடமிருந்து தகவல்  கிடைத்தது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வந்து நீண்டகாலமாக புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளமை விசாரணையின்போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

2003ஆம் ஆண்டிலிருந்து தான் இலங்கைக்கு வரத்தொடங்கி புடைவை வியாபாரத்தில் ஈடுபடுவதுடன், தன்னிடமிருந்து புடைவை கொள்வனவு செய்தமைக்குரிய சுமார் 5 இலட்சம் ரூபாயை இங்குள்ள வாடிக்கையாளர்கள் தனக்குத்; தரவேண்டியுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .