2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

'இன முரண்பாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
இன ரீதியான முரண்பாடுகள் ஏற்படும்போது, அவற்றை உடனடியாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்பதுடன், நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையும் ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு புதன்கிழமை (21) விஜயம் செய்த அமைச்சர், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இன நல்லிணக்கம் தொடர்பான  கூட்டத்திலும் கலந்துகொண்டார். இதில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய மட்டக்களப்புக்கு விஜயம் செய்து, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமண ரத்ன தேரர், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்; ஞானசார தேரர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளோம்.  இதன்போது, நாட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்துவதற்கு அவர்கள் தடையாக இருக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளனர்' என்றார்.  

'இன நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். எமது நாடு ஓர் இலக்கை நோக்கி நகர்கின்றது. அந்த இலக்கை அடைவதற்கு அனைவரும் உதவியாக இருக்க  வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--