Suganthini Ratnam / 2016 மார்ச் 15 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
வருடாந்தம் உலகில் உற்பத்தி செய்யப்படும் 5,000 மெட்ரி;க்தொன் பொலித்தீனில் 70 சதவீதமானவை இலங்கையில் பாவிக்கப்படுகின்றன. இதில் 10 சதவீதமானவை மாத்திரமே மீள்சுழற்சி செய்யப்படுகின்றன. எஞ்சியவை சூழலில் வீசப்படுவதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் 'மாறுவோம், மாற்றுவோம்' எனும் தொனிப்பொருளில் பொலித்தீன் பாவனையை குறைக்கும் செயல்திட்டத்தை மட்டக்களப்பு பொதுச் சந்தையிலல் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒவ்வோரு வருடமும் பொலித்தீன் பாவனையால் 100,000 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இறக்கின்றன' என்றார்.
'மீள்சுழற்சிக்குரிய பொலித்தீனை மக்கள் பயன்படுத்த வேண்டும். 20 சதவீதமான பொலித்தீன்; மட்டுமே உயிரியல் பிரிகைக்குட்படுகின்றன. இதற்கு 500 முதல் 1000 வருடங்கள் எடுக்கின்றன.
இயற்கையாகக் கிடைக்கும் பன், ஓலை, என்பவற்றைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பைகளை பாவனைக்கு கைக்கொள்ளுமாறு பணித்திருந்தோம். இதற்கு மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். இச்செயலானது பசுமையான சூழலைப் பேணுவதற்குக் களமாக அமையும்' என்றார்.
இதன்போது, 'எதிர்காலச் சந்ததியைக் காக்க, பொலித்தீன் பாவனையைத் தவிர்க்க விழித்தெழுவோம்' எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

11 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago