Niroshini / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
துறைநீலாவணை கிராமத்திலுள்ள விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவ சமருத்துவ முகாம், நாளை ஞாயிற்றுக்கிழமை (18) காலை 8.00 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை துறைநீலாவணை மத்தியகல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வைத்திய முகாமில் அவுஸ்ரேலியாவிலிருந்து வருகைதந்துள்ள குடல் மற்றும் ஈரல் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் எஸ்.சிவதாசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட பொதுவைத்திய நிபுணர்களான டொக்டர் முத்து முருகமூர்த்தி, டொக்டர் ஜெ.ஜெயரூபன் சிறுபிள்ளை விசேட வைத்திய நிபுணர்டொக்டர் சித்ரா வாமதேவன், தோல் சிகிச்சை விசேட வைத்தியநிபுணர் டொக்டர் என்.தமிழ்வண்ணன், உளநலவிசேட வைத்தியநிபுணர் டொக்டர் ரீ.கடம்பநாதன், போசாக்கு பற்றியகலந்துரையாடல் போசனை வைத்தியர் டொக்டர் எஸ்.விவேகானந்தன் மற்றும் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் கடமை புரியும் மகப்பேற்றுமற்றும் பெண்நோயியல் விசேடவைத்திய நிபுணர் டொக்டர் யுரேகா விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும், கண் வைத்தியக் குழுவினால் கண் பரிசோதனைகளும் தொற்றாநோய் வைத்தியச் சேவையும் பல்வேறுதுறைசார் வைத்திய நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வைத்தியக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு இலவசமாக மருந்துகளும் வழங்கப்படவுள்ளன.
நிறைகுறைவான 3 வயதுக்குட்பட்ட சிறுபிள்ளைகளுக்கும், உடற் திணிவுச் சுட்டி குறைவான கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அறிவுறுத்தல் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago