2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'இளவயதுத் திருமணம் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 26 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இளவயதுத் திருமணம் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தைப் பொறுப்பதிகாரி எம்.என்.எம். றபாஸ் தெரிவித்தார்.

யுத்தத்துக்குப் பின்னர் சிவில் சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் காட்சிக் கலையரங்க அமர்வு, நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடிப் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கணவன்மார்களை இழந்த பெண்கள் பலர்; வறுமை நிலை காரணமாக தங்களின்  பெண் பிள்ளைகளை சிறு பராயத்திலேயே திருமணம் முடித்துக் கொடுக்கும் துரதிஷ்ட நிலை அதிகரித்து வருகின்றது.
18 வயதுக்குட்பட்ட  பிள்ளைகளை சட்டப்படி பதிவுத் திருமணம் செய்ய முடியாது என்பதால், பதிவு செய்யாமலே சம்பிரதாயத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.

எனவே, பதிவு செய்யாமல் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்ற பொழுது பல்வேறு உடல், உள ரீதியான ஆரோக்கியப் பிரச்சினைகள் எழுகின்றன. இதனால், இளவயதிலேயே வாழ்க்கையைப் பிரிந்து விடுகின்றரர்கள். சிறுமியாக இருக்கின்றபோதே கைக்குழந்தையுடன் கைம்பெண்ணாகி விடுகின்ற துர்ப்பாக்கியத்தையும் இந்தச் சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும்.

மேலும், கணவன் இல்லாமல் குழந்தைக்குப் பிறப்புப் பதிவு வைக்க முடியாது. அது சிரமமான காரியம். எனவே, குழந்தை பிறப்புப் பதிவில்லாமலேயே வாழ வேண்டியேற்படுகின்றது. மேலும், கைவிட்டுச் சென்ற கணவனிடமிருந்து தாய்க்கும் பிள்ளைக்கும் சட்டப்படியான தாபரிப்புப் பணத்தையோ வேறேதும் நட்டஈடோ கோர முடியாது. இத்தகைய துர்ப்பாக்கிய நிலை வளர்வதற்கு இனிமேலும் அனுமதிக்கக் கூடாது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .