2021 மே 06, வியாழக்கிழமை

இளைஞனை காணவில்லை

Sudharshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு, இலக்கம் 29, நான்காம் குறுக்கை சேர்ந்த  தட்தோனந்தம் கிரிசாந்த் (சாந்தன்) என்ற 19 வயது இளைஞனை, திங்கட்கிழமை (18) முதல் காணவில்லை என அவரது தாயார் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது  மகன் திங்கட்கிழமை காலை வீட்டில் இருந்த நிலையில், காணாமல் போயுள்ளார் என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன்   தொடர்பாக தகவல் அறிந்தவர்கள்  077 95 89 551  என்ற  அலைபேசி இலக்கத்துக்கும் அல்லது 065 222 44 23  என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய இலக்கத்துக்கும் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .