Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
வாகனேரி ஆலயத்தில் சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பாக உண்மைநிலை அறியாமல் யார் மீதும் குற்றம் சுமத்தக்கூடாது. பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தி சூத்திரதாரிகளைக் கண்டுபிடிகக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாகனேரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் சேதமாக்கப்பட்டது தொடர்பாக இன்று திங்கட்கிழமை கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடரந்து தெரிவிக்கையில்- 'வாகனேரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகம், பூசகர் மற்றும் பொதுமக்களுக்கிடையே எவ்வித பிரச்சினைகளோ முரண்பாடுகளோ இல்லை என அவர்களிடம் கலந்துரையாடிபோது எங்களால் அறியமுடிந்தது.
அண்மைக்காலமாக நடைபெறும் சம்பவங்களை எடுத்துப் பார்க்கும் போது ஏதாவது முரண்பாடுகளை உருவாக்க வேண்டும் பிரச்சினைகளை தூண்டவேண்டும் என்ற இடிப்படையில் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான சம்பவங்களின் தொடர்ச்சியாக கூட இது இருக்கலாம்.
உள்ளுர் மட்டத்தில் பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை சில சக்திகள் ஏதோவொரு நோக்கத்திற்காக செயற்படுகிறார்கள் என்பதை எங்களால் உணரமுடிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளும் போது இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக செல்லாமல் கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
கடந்த ஆட்சியில் ஆலயங்களின் விக்கிரகங்கள் மற்றும் உண்டியல் உடைத்தல், சேதமாக்கல் போன்ற சம்பவகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆனால் புதிய ஆட்சியில் இது முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும்.
ஆலயங்கள் மட்டுமல்ல பள்ளிவாசல்கள் தேவாலயங்கள் விகாரைகள் என்பவற்றில் சேதம் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெறாதவகையில் பொலிஸார் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஆலயம் சேதமாக்கப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் பொலிஸாருக்கு சரியான தகவல்களை வழங்கும் போது அவர்களால் நடவடிக்கைளை முன்னெடுக்க முடியும். பொதுமக்களின் கண்காணிப்பு மிகவும் அவசியமாகும்.
இச்சம்பவம் தொடர்பாக ஆத்திரப்பட்டு குற்றங்களைச் சாட்டாமல் சரியான விசாரணைகளின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்க வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்' என்றார்.
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago