2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

உத்தியோகத்தர்களுக்கான வாண்மைத்துவ விருத்திச் செயலமர்வு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண தமிழ் மொழிமூல முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மைத்துவ விருத்திச் செயலமர்வு, மட்டக்களப்பு மண்முனை வடக்கு டேர்பா மண்டபத்தில் இன்று(19) நடைபெற்றது.

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரனின் ஆரம்ப உரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வு, உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இச்செயலமர்வில், மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தமிழ் மொழிமூல முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குகொண்டனர்.

வளவாளராக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி பாரதி கென்னடி கலந்துகொண்டு, விரிவுரைகளை வழங்கினார்.

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வாண்மைத்துவ விருத்தியின் மூலம், பிள்ளைகளின் அறிவு, திறன்களை விருத்தி செய்வதன் மூலம், எதிர்கால அபிவிருத்தியை அடைந்து கொள்ளும் நோக்கில், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--