2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

உரிமையாளருக்கு அபராதம்

Yuganthini   / 2017 ஜூன் 08 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சுகாதாரத்துக்கு ஏற்ற முறையில் உணவு வைக்கப்பட்டிருக்காமை மற்றும் உணவு பரிமாறுபவருக்கு மருத்துவ சான்றிதழ் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ், மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கான சிற்றுண்டிச்சாலை நடத்துபவருக்கு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா, 1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் திங்கட்கிழமை,மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, குறித்த சிற்றுண்டிச்சாலை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையில் உணவு வைக்கப்பட்டிருக்காமை மற்றும் உணவு பரிமாறுபவருக்கு மருத்துவ சான்றிதழ் இல்லாமை போன்றவை தொடர்பில் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .