2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

’உறுதிமொழி வழங்கினால் சத்தியாக்கிரகத்தைக் கைவிடத் தயார்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 மே 31 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண முதலமைச்சரோ அல்லது அரசாங்க பிரதிநிதியொருவரோ தம்மை வந்து சந்தித்து, வேலைவாய்ப்புக்கான நியமனங்கள் வழங்குவது தொடர்பில்  எழுத்து மூலமான உறுதிமொழியை வழங்கினால், சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கைவிடுவதற்குத் தயார் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

வேலைவாய்ப்புக்கான அரச நியமனங்கள் கோரி, காந்தி பூங்காவுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றுடன்  100ஆவது நாளை எட்டியுள்ளது.

அப்பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில், 'வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவரும் போதிலும், எம்மிடம்  இன்னமும் உறுதியான எந்தவிதத்  தகவலும் வழங்கப்படவில்லை.

மேலும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறுகின்றார்களே தவிர, அந்த நியமனங்கள்  எப்போது வழங்கப்படும் என்று உறுதியாக இன்னமும் கூறப்படவில்லை' என்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X