2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'ஊழியர் சேமலாப நிதியில் 8 வீதத்தை வழங்க நடவடிக்கை'

Niroshini   / 2015 நவம்பர் 18 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்துக்குள் நிரந்தர ஊழியர்களாகச் சென்றவர்களுக்கு, அவர்கள் சமுர்த்தி அதிகார சபையின் ஊழியர்களாக இருந்தபோது செலுத்திய ஊழியர் சேமலாப நிதியில் 8 வீதத்தினை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதி செயலாளர் ஏ.எச்.ஏ.வஹாப் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
 
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்துக்குள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன் போன்ற விடயங்கள் தொடர்பில் எமது திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவை அண்மையில் எமது அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

இதன்போதே, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்துக்குள் நிரந்தர ஊழியர்களாகச் சென்றவர்களுக்கு அவர்கள் சமுர்த்தி அதிகார சபையின் ஊழியர்களாக இருந்தபோது செலுத்திய ஊழியர்; சேமலாப நிதியில் 8 வீதத்தினை உடனடியாக குறித்த உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாக இங்கு தீர்வு காணப்பட்டது.

அத்தோடு மிகுதியாகவுள்ள ஊழியர் சேமலாப நிதியின் 12 வீதத்தினையும் நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தீர்ப்பினை பார்த்து முடிவெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, சமுர்த்தி அதிகார சபையின் சமுர்த்தியோகத்தர்களாக இருந்து தற்போது வாழ்வின் எழுச்சி திணைக்களத்துக்கு மாற்றப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் கோவைகள் இன்னும் ஓய்வூதிய திணைக்களத்துக்கு அனுப்பப்படாததால் அவர்களுக்கான ஓய்வூதிய அட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால் தற்போது கடமையிலுள்ள சில உத்தியோகத்தர்கள் மரணித்துள்ளதால் அவர்களின் மனைவி, பிள்ளைகள் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கோவைகளை ஓய்வூதிய திணைக்களத்துக்கு வழங்கி இவர்களுக்கான ஓய்வூதிய அட்டைகளை பெற நடவடிக்கையினை மேற்கொள்வதற்கும் அத்துடன் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் அமைச்சருடனான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X