2021 மார்ச் 01, திங்கட்கிழமை

எரிபொருள் நிரப்பும் நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை

Niroshini   / 2016 மே 21 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும் மீனவர்களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையத்தை திறந்து செயற்படுத்துவதற்கு துரிதமாக எடுக்கப்படுமென கடல்தொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் அழைப்பின் பேரில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த அமைச்சர் மகிந்த அமரவீர, காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும் மீனவர்களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையத்தை பார்வையிட்டார்.

இந்த எரிபொருள் நிரப்பும் நிலையம் காத்தான்குடி கடற்கரையிலுள்ள மீனவர்களுக்கு சுனாமி அனர்தத்தின் பின்னர் நிர்மானிக்கப்பட்டது. இங்கு மீனவர்கள் தமது மீண்பிடி இயந்திர படகுககளுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றை நிரப்புவதற்கு நிர்மானிக்கப்பட்டது.

தற்போது இந்த  எரிபொருள் நிரப்பும் நிலையம் மூடப்பட்டுள்ளதுடன ;இது துருப்பிடிக்கும் நிலைமையும் உருவாகி உள்ளது.

இதனை திறந்து மீனவர்களுக்கு அவர்களின் இயந்திர படகுககளுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றை நிரப்புவதற்கு வழி செய்து கொடுக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

இதனை பார்வையிட்ட அமைச்சர் மகிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி இதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இதன் போது உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .