எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 மே 23 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஏறாவூர் முதலாம் குறிச்சியில் பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இருந்த உண்டியல் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த உண்டியலில் சேகரிக்கப்படும் நிதியானது, இந்தப் பள்ளிவாசலின் புதிய கட்டட நிர்மாணத்துக்காகப் பயன்படுத்தப்பட இருந்தது.
இந்த உண்டியலில் பணம் திருடப்பட்டதை அடுத்து, அந்த உண்டியல் பள்ளிவாசல் வளாகத்தில் வீசப்பட்டுக் காணபட்டிருந்தது.
சுபஹ் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்தவர்கள் இதை அவதானித்து, பள்ளிவாசல் நிர்வாகனத்திருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தம்மிடம் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
30 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago