Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 மே 23 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள றகுமானிய்யா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை மற்றும் அந்த வித்தியாலயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக எழுதிய 7 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் அவ்வித்தியாலய அதிபர், திங்கட்கிழமை (22) மாலை முறைப்பாடு செய்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட மேற்படி 7 பேருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அவ்வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.
றகுமானிய்யா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை மற்றும் அந்த வித்தியாலயம் தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில்; சிலர் எழுதி வந்தமையைக் கண்டித்து அவ்வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் திங்கட்கிழமை (22) சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அவ்வித்தியாலயத்துக்குச் சென்ற மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன், பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அத்துடன், அவர் அளித்த வாக்குறுதியை அடுத்து, சுகவீன லீவுப் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டு நேற்று வித்தியாலயத்துக்கு சமூகமளித்து கடமையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அதிபர் கூறினார்.
மேற்படி வித்தியாலய அதிபர் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினர்.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago