2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

'ஏறாவூரில் கடைகள் உடைக்கப்பட்டுள்ளமை சதி வேலை'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 06 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தமிழ் -முஸ்லிம் எல்லைப் பகுதியான ஏறாவூர் நான்காம் குறிச்சியில்; ஒரே நேரத்தில் 6 கடைகள் உடைக்கப்பட்டுள்ளமையானது இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி வேலையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஏறாவூர் நான்காம் குறிச்சியிலுள்ள நகைக்கடை, இரண்டு பலசரக்குக்கடைகள், மீள்நிரப்பு அட்டைகள் விற்பனை நிலையம், சிகை அலங்கார நிலையம், இலத்திரனியல் உபகரண  விற்பனை நிலையம் ஆகியன சனிக்கிழமை (05) அதிகாலை உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுடன் கலந்துரையாடியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஏறாவூர் நான்காம் குறிச்சியானது பூர்வீகமாக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் வாழ்கின்ற ஓர் எல்லைப்பகுதி. அப்படிப்பட்ட ஒரு பிரதேசத்தில் திட்டமிட்டு தமிழ் மக்களின் 6 கடைகள் ஒரே நேரத்தில் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் கோலோச்சியுள்ள இந்தக் காலகட்டத்தில், இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இவ்வாற சதி வேலைகளில் ஒரு பிரிவினர் செயற்படுவதை எம்மால்; அறியக்கூடியதாக உள்ளது.
இந்தச் சம்பவத்தைப் நோக்கும்போது, திட்டமிட்ட சதியின் அடிப்படையில் இன ரீதியான நல்லுறவைக் குழப்பும் ஒரு நிலைமையைத் தோற்றுவிக்க முயற்சிப்பது போல் எனக்குத் தோன்றுகிறது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--