2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஓவியப் போட்டி: மாவட்டத்தில் முதலிடம்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

இலங்கை விமானப் படை நடத்திய ஓவியப் போட்டியில், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் எம்.ஜே.எம். ஜுமைல், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமானப் படைத் தலைமயகம் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்குப் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடத்தியது. அவற்றில், மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்திய ஓவியப் போட்டியில் குறித்த மாணவன் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

விமானப்படைத் தலைமயகம் அனுப்பி வைத்த சான்றிதழை, வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட், மாணவனுக்கு வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .