2021 மார்ச் 01, திங்கட்கிழமை

காட்டு யானை தாக்கி பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை பகுதியில் காட்டு யானை தாக்கியதில், காவல் கடமையில் ஈடுபட்ட தொழிலாளியொருவர் பலியானாரென, கரடியனாறு பொலிஸார் நேற்று (25) தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், உறுகாமத்தில் வசிக்கும் ஜோதி ஜோட் (வயது 50) என்ற காவல் தொழிலாளியே உயிரிழந்துள்ளார். இவர் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாக்கும் காவல் கடமையில் இருந்தபோது, அவ்விடத்துக்கு வந்த காட்டு யானை தாக்கியதால் உயிரிழந்தார் என, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .