2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கடத்தப்பட்ட பசுக்களுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 13 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடத்தப்பட்ட 4 பசுக்களுடன் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு, ஏறாவூர்  04ஆம் குறிச்சியில் இரு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதுடன், அப்பசுக்களையும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

திடீர் சோதனை மேற்கொண்டபோதே 22, 33 வயதுகளையுடைய இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இப்பசுக்களை ஏற்றிவருவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் இறைச்சிக்காக அறுக்கும் நோக்குடன் அனுமதிப்பத்திரமின்றி இவற்றைக்  கடத்தி வந்துள்ளனர் என்றும் அவை மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நோய் வாய்ப்பட்டவை  என்றும் தெரிவித்த பொலிஸார், பசுக்களை  கடத்தியமைக்காக  மிருகவதைக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .