Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மே 31 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பொன் ஆனந்தம்
மூதூர், பெரியவெளிக் கிராமத்தில் சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும் நீதியான விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு கோரியும் மாகாணம் தழுவிய ரீதியில் அனைத்து மாணவர்களுக்கும் ஒருநாள் பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் இன, மத, மொழி பேதமின்றி நாளையதினம் பாடசாலைகளைப் புறக்கணித்து, பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான வன்புணர்வுச் சம்பவங்களால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
'பாடசாலைகளில், பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லுமிடங்களில் அதிபர்கள், ஆசிரியர்களின் செயற்பாடுகளினாலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
'தொடர்ந்து இடம்பெறும் வன்புணர்வுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்களும் புத்திஜீவிகளும் மாத்திரம் செயற்பட்டால் போதாது.
'சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸாரும் நீதிக்குத் தலைவணங்கிச் செயற்பட வேண்டும்.
'குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை செல்வந்தர், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் பார்க்காது சட்டத்தை நிலை நாட்ட வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளோ, பொலிஸாரோ சமத்துவமான நீதியை அழுத்தம் கொடுக்காமல் ஒருபோதும் பெற்றுத்தரப் போவதில்லை.
'எனவே, எமது உரிமையை வென்றெடுப்பதற்கும் எமது மாணவர் சமுதாயத்தை சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கும் நாம் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
49 minute ago
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
6 hours ago
8 hours ago