2025 ஜூலை 02, புதன்கிழமை

காத்தான்குடியில் மென்பொருள் பற்றிய விழிப்புணர்வு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 மே 24 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் முதல்; தடவையாக காத்தான்குடிப் பிரதேச செயலகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  கைத்தொலைபேசி மென்பொருள் பற்றிய விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் காத்தான்குடியில் இன்று நடைபெற்றது.

காத்தான்குடிப் பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணி,  மீண்டும் பிரதேச செயலகத்தை அடைந்தது.

இதன்போது காத்தான்குடி பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,  கைத்தொலைபேசி மென்பொருள் பற்றி அறிமுகம் செய்து அது தொடர்பில் விளக்கமளித்தனர்.

இந்தக் கைத்தொலைபேசி மென்பொருள் மூலமாக காத்தான்குடிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பொதுமக்கள்,  காத்தான்குடிப் பிரதேச செயலகம் சார்ந்த தகவல்களை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பிரதேச செயலக சேவை பெறுநர் விவரக் கொத்துகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

அத்துடன் குறித்த சேவை தொடர்பான உத்தியோகத்தர்இ விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் மற்றும் அவர்களுடன் இலகுவில் சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தொடர்பு கொள்வதற்கும் ஏற்ற வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது என  காத்தான்குடிப் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

தங்களுக்குத் தேவையான தாபன விதிமுறை, மின் புத்தகம், வர்த்தமானி அறிவித்தல் மற்றும் சுற்றறிக்கைகளை  அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒரே இடத்தில் இம்மென்பொருளைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .