2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி - கொழும்புக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 மார்ச் 03 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு தினசரி இரவு நேரப் புதிய பஸ் சேவை, இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போவால் நேற்று இரவு (02) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியிலிருந்து தினசரி இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த பஸ், கொழும்பு, புறக்கோட்டையை காலை 6 மணிக்குச் சென்றடையும். அதேபோன்று, கொழும்பு, புறக்கோட்டையிலிருந்து  தினமும் நண்பகல் 12 மணிக்குப் புறப்படும் இந்த பஸ் சேவை மாலை 7 மணிக்கு காத்தான்குடியைச் சென்றடையவுள்ளது.

இதற்கான ஒரு வழிக் கட்டணம் 442 ரூபாயாகுமென, இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரி எம்.அஸீஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .