எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன், தனது பதவியை, இன்று (03) இராஜினாமாச் செய்துள்ளார்.
தான் வகித்து வந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் பதவியைத் தன்னுடைய சுயவிருப்பத்தின் பேரில் இராஜினாமாச் செய்வதாக, மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் உதவித்தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுத்து மூலமாக அவர் அறிவித்துள்ளார்.
நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தல் வரையிலும் நான் நகரசபை உறுப்பினராகச் செயற்பட ஏற்கெனவே தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் மாகாணசபைத் தேர்தலுக்கான காலம் இழுத்தடிப்புச் செய்யப்படுவதன் காரணமாகவே, இந்த முடிவைத் தான் எடுத்துள்ளதாகவும் முபீன் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான பதவி இல்லாவிட்டாலும் தொடர்ந்தும் தன்னுடைய மக்கள் பணி தொடரும் எனவும் முபீன் மேலும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago