2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

கொரோனா சிகிச்சைக்கு எதி​ராகத் தீாமானம்

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2020 மார்ச் 11 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை, மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களில் அழைத்து வந்து தங்கவைத்து சிகிச்சை, பரிசோனை வழங்கும் முகாம்களை அமைப்பதை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுத்தி,  கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதச சபையில் விசேட அமர்வில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளதாக, வாகரை பிரதேச சபை தவிசாளர் சி.கோணலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது  அவர் தெரிவித்ததாவது,  “யுத்தம், சுனாமி போன்ற அனர்த்தங்களால் வாகரை பிரதேசம் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளதுடன், மிகவும் பின்தங்கிய பிரதேசமாகவும் உள்ளது.

“தற்போது வெகுவாகப் பரவிவரும் கொ​ரோனா வைரஸ் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், அவ்வாறான தொற்றுக்குள்ளானவர்களை வாகரை பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களுக்கு அழைத்து வருகின்றமை இப் பிரதேசத்தை மேலும் வறுமை நிலைக்கு இட்டுச் செல்லும். அவர்களது நாளாந்த செயற்பாடுகளிலே முடக்கம் செய்யப்படும்” என்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான தகவல் அடங்கிய  அறிக்கையை சுகாதார அமைச்சின் செயலாளாருக்கு அனுப்பியுள்ளதாகவும், தவிசாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X