வா.கிருஸ்ணா / 2020 மார்ச் 15 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய டெங்கொழிப்பு நடவடிக்கைகள், இம்மாதம் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் பிரகடனப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், இன்று (15) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ், மட்டக்களப்பு மாநகர சபையும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களமும் இணைந்து மட்டக்களப்பு, கறுப்பங்கேணியில் பாரிய டெங்கொழிப்பு சிரமதானப் பணியை முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு நோயாளிகள் அதிகளவு அடையாளம் காணப்பட்ட பகுதியாக கறுப்பங்கேணி இருந்த காரணத்தால் இப்பகுதியில் இந்தச் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago