2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

குளத்தில் நீராடிய சிறுவன் பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள வடிச்சல் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் றஹுமான் முஹம்மத் அஸான் (வயது 16) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று, உறவினர்களுடன் வடிச்சல் குளத்துக்குச் சென்ற இந்தச் சிறுவன், நண்பர்களுடன் சேர்ந்து நீராடியுள்ளார். அப்பொழுது இவர் திடீரென குளத்தின் சேறும் நகதியுமான ஆழப் பகுதியில் மூழ்கியுள்ளார்.

சக நண்பர்கள், இவர் மூழ்குவதை அவதானித்து கூக்குரலெழுப்பியுள்ளனர்.

அப்பொழுது உதவிக்கு விரைந்தவர்களால்  நீரில் மூழ்கிய சிறுவன் மீட்கப்பட்டபோதும் அவர் உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற்றாய்வுப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

சம்பவம் பற்றி கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--