Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 மே 25 , மு.ப. 10:10 - 1 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையில், முதற்கட்டமாக 1,700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அம்மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் வாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், ஏனைய வேலையற்ற பட்டதாரிகளுக்கும் கட்டம் கட்டமாக நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில், ஏனைய 3,080 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான போட்டிப் பரீட்சை அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறலாம் எனவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் 4,784 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கு அண்மையில் தேசிய முகாமைத்துவ திணைக்களம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பட்டதாரிகளை ஆசிரியர் நியமனங்களுக்குள் உள்ளீர்ப்பது தொடர்பில் மாகாணக் கல்வி அமைச்சில் புதன்கிழமை (24) கூட்டம் நடைபெற்றது.
இதில் பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான பொறிமுறை குறித்து ஆராய்ந்து விடயதானங்களின் அடிப்படையில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பிலும் இன்ன பிற விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Ayunoos Thursday, 25 May 2017 07:24 AM
ஆளனி வெற்றிடங்கள் எப்போது நிவா்த்தி செய்யபோறிங்க முதலமைச்சரே?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago