Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயன்கேணி காட்டுப்பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினர்களுக்கிடையில் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த 05 பேர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கைகலப்பைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், மற்றுமொரு சந்தேக நபரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
23 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
31 minute ago
1 hours ago