Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 18 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட காங்கேயனோடைப் பிரதேசத்தில்; அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்காக 1 கோடியே 55 இலட்சம் ரூபாயை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் செயலகம், இன்று திங்கட்கிழமை தெரிவித்தது.
கிராமிய அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் காங்கேயனோடைப் பிரதேசத்தில் மீனவர் சங்கக் கட்டட நிர்மாணத்துக்காக 3.5 மில்லியன் ரூபாயும் கல்வெட்டு அமைப்பதற்காக 2 மில்லியன் ரூபாயும் காங்கேயனோடை பொதுமையவாடி அணைக்கட்டு அமைப்பதற்கும் மண் நிரப்புவதற்காக 1.5 மில்லியன் ரூபாயும் காங்கேயனோடை தெற்கு பொதுவிளையாட்டு மைதானப் புனரமைப்புக்காக 1 மில்லியன் ரூபாயும்; மர்ஹூம் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் வைத்தியர் ஒழுங்கைக்கு கொங்கிறீட் இடுவதற்காக 7.5 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அச்செயலகம் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago